ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து 24 மணி நேரத்தில் 80 லட்சம் பார்வையாளர்களையும் பெற்று தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் சாதனை படைத்துள்ளது. ரஜினி என்றாலே சூப்பர் ஹிட்,  அதுவும் அவரின் ஓப்பனிங் பாடல் என்றால் ஹீட் டோ ஹீட் என்பது எல்லோருக்கும் தெரியும்.  அந்த வகையில் தற்போது தர்பார் படத்தின் சும்மா கிழி என்ற பாடல் ரஜினியின் ஓப்பனிங் சீன் பாடல் போல இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. 

அதாவது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தர்பார் இதில் கதாநாயகியாக நயன்தாரா  நடித்துள்ளார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாக உள்ளது .  இப்படத்தில் சும்மா கிழி என்று எஸ்பிபி பாடிய முதல் பாடல் நேற்று முன்தினம் யூ டியூப்பில் வெளியானது.  ரஜினி படங்களில் வரும் ஓப்பனிங் பாடலை போல சும்மா கிழி பாடல் இருப்பதால்  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது .  பாடல் வெளியான ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்கள் கடந்த நிலையில் 24 மணி நேரத்தில் 80 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துசாதனை படைத்துள்ளது. 

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இசையமைப்பாளர் அனிருத்,    இது தலைவரின் அன்பு சாம்ராஜ்யம் .  24 மணி நேரத்தில் 8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து அதிக முறை பார்த்த தமிழ் படம் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளது . அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் இன்று காலை வரை ஒரு கோடியே 18 லட்சம் பார்வைகளை கடந்து  சாதனை புரிந்துள்ளது குறிப்பிடதக்கது.