தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கான பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. யோகிபாபு ஒருவரை நம்பியே வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சூரி இருக்கும் இடமே தெரியாமல் இருந்த நிலையில், இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் காமெடிக்காக சூரி இணைந்துள்ளார். ’என் கனவு நிறைவேறியுள்ளது’ என்று சூரி குஷியாகியுள்ளார். ஆனால் ரசிகர்கள்தான் நொந்துள்ளனர். சூரிக்கு சிரிக்க தெரியுமான்னே தெரியலை, இந்த லட்சணத்துல அவர் சிரிப்பு காட்டி நாம சிரிக்கவா? ஏற்கனவே ‘விவேகம்’ படத்துல சூரியின் காமெடி சொதப்பியும் கூட சிறுத்தை சிவா திருந்தலையா? என்று பொங்கியுள்ளனர். 

ஆக்சுவலாக இந்த படத்தில் சூரி இடத்தில் முதலில் வடிவேலுவைதான் யோசித்தாராம் இயக்குநர். ஆனால் ரஜினிக்கும் வடிவேலுவுக்கும் ஒரு வாய்க்கா தகராறு உள்ளது. ரஜினியின் ராணா படத்தை ‘ராணாவாவது, காணாவாவது!’ என்று பேசிவிட்டார் வடிவேலு. அதில் எழுந்த பகை, இன்னும் தீரவில்லை. ரஜினியுடன் வடிவேலு இணைந்தால் தெறிக்கும்! சிவா பெரிதாய் மெனெக்கெட்டிருக்கிறார். ஆனால், ரஜினி முடியாது! என்றுவிட்டாராம். ’உங்க பகைக்காக எங்களை ஏன் பழிவாங்குறீங்க?’ என் கடுப்பாகின்றனர் ரசிகர்கள். 

*ரஜினியின் மிகப்பெரிய விசிறி, மாஸ் மற்றும் பிரம்மாண்ட இயக்குநரான ராஜமவுலி. அநேகமாக இவர்தான் ரஜினியின் கடைசி படத்தை இயக்குவார்! என்கிறார்கள்.  கடந்த சில நாட்களாக தென்னிந்திய சினிமா இண்டஸ்ட்ரியில் இப்படியொரு தகவல். ஆனால் சிலரோ ராஜமவுலி, ரஜினி படத்தை இயக்கலாம். ஆச்சரியமில்லை. ஆனால் அது ரஜினியின் கடைசி படம் என்று சொல்ல முடியாது! என்றுள்ளனர். 

*சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் ஜோதிகா. ஆக்சுவலாக அந்த இடத்தை பிடிக்க குஷ்பு முயன்றாராம். சினிமா நடிப்பிலிருந்து பெரும் இடைவெளி விட்டிருக்கும் குஷ்புவுக்கு மீண்டும் நடிப்பு ஆசை வந்துள்ளது. ரீ எண்ட்ரி மாஸாக இருக்க வேண்டும் என்பதற்காக ரஜினி படத்துக்கு முயன்றிருக்கிறார். ஆனால் சூப்பர் ஸ்டாரே அதையும் விரும்பவில்லையாம்.