பெரும்பாலும் என்னை செக்ஸ் படங்களில் நடிக்க வைக்கவே  தயாரிப்பாளர்கள் என்னை  அணுகினர் என  ரஜினி பட கதாநாயகி  தெரிவித்துள்ள தகவல் மிகுந்த பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது .  பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே ,  தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடி சேர்ந்தார். 

இவரின் நடிப்புத் திறனை கண்டு தமிழ் ரசிகர்கள் வெகுவாக பாராட்டியதுடன் , அதுமுதல்  தமிழ் மக்களின் மனதில் நல்ல நடிகை என்ற பட்டத்துடன் இடம்பிட்தார் ஆப்தே. ஆனால் சமீபத்தில்   நிர்வாணமாக வீடியோ வெளியிட்டும்,   பாத்ரூமில் நின்றபடி  செல்பி புகைப்படங்களை  வெளியிட்டு  சர்ச்சையில்  சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார் இவர்.   அதேபோல் அதிகமாக கவர்ச்சி நிறைந்த ஆபாச  வேடங்களில் அடித்ததால் தன் சொந்த  ரசிகர்களாலையே  கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார் .  ஆபாச காட்சிகளை  விரும்பி முன்வந்து  ஏற்று  நடிக்கிறார் என அவரை பலர் குற்றம் சாட்டி வந்தனர் .  இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி  கொடுத்துள்ள ராதிகா ஆப்தே, 

தன்னுடைய கவர்ச்சியையும்  நடிப்பையும் கண்ட சில தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் பாலியல் நகைச்சுவை படங்களில் நடிக்கவே என்னை  அணுகினர் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .  ஒரு துறையில் கால் வைத்தால் அதுதான் பிழைப்பு, வழி என்று இல்லை ஆனால் பலர் அந்த பாதைக்கே  என்னை அழைத்தார்கள் ஆனால் தற்போது அதையெல்லாம் தவிர்த்து விட்டு ,  நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார், ஆபாச படத்திற்காக தயாரிப்பாளர்கள் தன்னை அணுகினர் என்ற ஆப்தேவின் தெரிவித்திருப்பது   அவரது  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.