அதனால் மேலும் 5 நாட்களுக்கு போலீசார் காவலை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 

கன்னட திரையுலகில் பகீர் கிளப்பியுள்ள போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட திரைப்பட இயக்குநரான இந்திரஜித் லங்கேஷ் கொடுத்த தகவல்களின் படி பல திரைப்பிரபலங்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த விவகாரத்தில் கன்னட நடிகை ராகினி திரிவேதிக்கு நெருக்கமாக தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் ராகினி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். பெண் போலீசார் உட்பட 7 பேர் கொண்ட குழு அதிரடி சோதனையில் இறங்கியது. இதையடுத்து நடிகை ராகினி திரிவேதியை பெங்களூர் போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். 

​மகளிர் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ராகிணி நேற்று காணொலி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். தன்னை போலீசார் யாரையும் சந்திக்க விடாமல் தடுப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறினார். ஆனால் போலீசாரோ ராகினிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோரை சந்திக்க அனுமதித்ததாகவும் தெரிவித்தனர். இருப்பினும் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறினர். 

அதனால் மேலும் 5 நாட்களுக்கு போலீசார் காவலை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, காவலை 5 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மகளிர் கைதிகள் காப்பகத்தில் உள்ள ராகினியிடம் பெண் காவல் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.