தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருக்கும் நடிகரும், நடிகை ராதிகாவின் சகோதரருமான ராதாரவி, சென்னையில் இருந்து குடும்பத்தினர் 8 பேருடன் கோத்தகிரிக்கு பயணம் மேற்கொண்டதால் அவரை சுகாதார துறையினர் தனிமை படுத்தி, அவர் வீட்டின் முன் தனிமை படுத்தப்பட்டாக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர் என்கிற தகவல் கடந்த ஓரிரு தினத்திற்கு முன் பரவியது. இதுகுறித்து ராதா ரவி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி எம் கைகாட்டி மார்வளா பகுதியில் நடிகர் ராதாரவிக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு தன்னுடைய குடும்பத்தினருடன் கடந்த 10 ஆம் தேதி முதல் நடிகர் ராதாரவி தங்கியுள்ளார். சுகாதார அதிகாரிகள் ராதாரவி வீட்டிற்கு சென்று ஆய்வு செய்து அவருடைய குடும்பத்தினர் எட்டு பேர் தங்கியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சென்னையில் இருந்து உரிய அனுமதி பெற்ற பின்பே இங்கு அவர்கள் வந்திருப்பதாக நடிகர்  ராதாரவி தெரிவித்தார். எனினும் ராதாரவி உட்பட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

மேலும் செய்திகள்: சோகம் நீங்குவதற்குள் வந்த பிறந்தநாள்..! கண்ணீரோடு ரோபோ ஷங்கர் மகள் போட்ட நெஞ்சை உருக வைக்கும் பதிவு!
 

இவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்றாலும், அனைவரையும் தனிமையில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.  இதையடுத்து வீட்டில் தனிமை படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு 8 பேரையும் தனிமைப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக இவர்கள்  வீட்டிலிருந்து வெளியே செல்லக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிலர் உண்மைக்கு புறம்பாக, ராதா ரவிக்கு கொரோனா அறிகுறி உள்ளதால் அவர் தனிமை படுத்தப்பட்டதாக வதந்திகளை பரப்பினர். இப்படி பரவிய தகவலுக்கு விளக்கம் கொடுக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்: குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு... தன்னை தானே ஏலியன் என கலாய்த்து கொண்ட பிக்பாஸ் நாயகி ரைசா!
 

இந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது,  தன்னை பற்றி பல வதந்திகள் வருகிறது. இது போன்ற வதந்திகளை பரப்புபவர்களுக்கும் நன்றி. ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு வந்தால் தனிமைப்படுத்துதல் என்பது முறையானது தான். அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அவ்வாறு தனிமைப்படுத்துத்தலை ஏற்றுக் கொண்டால் மட்டுமே கார் பாஸ் கொடுப்பார்கள். எனவே தனிமைப்படுத்துதல் என்பதில் தவறேதுமில்லை.

நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன் என்றாலும் எனக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. நண்பர் பாரதிராஜாவுக்கும் இதே போன்ற பிரச்சனை எழுந்தது. நானும் அவரும் முகம் தெரிந்த நபர்கள் என்பதால் ஒருசில தவறான செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரு சிலர் தவறாக தான் எழுதுவார்கள் அவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

மேலும் செய்திகள்: என்ன பர்ஃபாமென்ஸ்... வாத்தி கம்மிங் பாடலுக்கு கியூட் ஆட்டம் போட்ட நயன்தாராவின் ரீல் மகள் மானஸ்வி! வீடியோ
 

மேலும் கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு நான் மீண்டும் சென்னைக்கு வருவேன் என்றும்  படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.  அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு உள்ளே இருங்கள் என்றும் நானும் 14 நாட்கள் எங்கும் வெளியில் செல்ல மாட்டேன் வீட்டிலேயே தான் இருப்பேன் என இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.