விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் படத்தின் கதையை அப்படத்தில் வில்லனாக நடிக்கும் ராதாரவி சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

விஜய்யின் 62ஆவது படமாக உருவாகிவரும் படத்தில் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கதையையும், தன்னுடைய கதாபாத்திரத்தையும் ‘வி’டாக்கீஸுக்கு அளித்துள்ள பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதில், ‘தொடர்ச்சியாகப் பல படங்கள் நடித்து வருகிறீர்கள். விஜய் படத்தில் உங்களின் கேரக்டர் என்ன?’ எனக் கேட்டபோது, “இரண்டாம் நிலை அமைச்சராக இதில் நடிக்கிறேன். எனக்கும் விஜய்க்கும் அதிகப்படியான மோதல் இருக்கும். அவருடன் நிறைய படங்கள் பண்ணியது இல்லை. நாலு படங்கள்தான் பண்ணியிருப்பேன்.

விஜய் ரொம்ப அமைதியானவர். அதையும் தாண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் அவருக்கான காட்சிகள் இல்லாதபோது மூணு மணி நேரம், கேரவனுக்குக் கூட போகாமல் தரையில் படுக்கை விரித்துப் படுத்திருக்கிறார். முருகதாஸ் சாரிடம் இப்பதான் முதல் படம் பண்றேன். அவரும் சாதாரணமாக, யதார்த்தமாகப் பழகுகிறார். அதனால்தான் அவர்கள் வெற்றியடைகிறார்கள்.

மேலும் பேசிய அவர், விஜய் படத்தில் சரிவர நடிக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தப் படத்தில் முழுக்க அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கு” என படத்தின் முக்கியமான திருப்பத்தை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.