Prithviraj Aadujeevitham Release Date : பல மலையாள நடிகர்களுக்கு தமிழ் மொழியிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்று கூறினால் அது மிகையல்ல. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானாலும், இன்று தமிழ் மக்களால் அதிகம் விரும்பப்படும் நாயகனாக மாறியுள்ளார் பிரித்திவிராஜ்.
இந்நிலையில் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் Blessy அவர்களால் துவங்கப்பட்ட கதைதான் ஆடுஜீவிதம் (The Goat Life). இந்த படத்தை உருவாக்க பெரிய அளவிலான பட்ஜெட் மற்றும் தொழில்நுட்பம் தேவைப்பட்ட காரணத்தினால் பல்வேறு தடங்கல்களை இந்த திரைப்படம் எதிர்கொண்டது.
மலையாள மொழியில் மட்டுமல்லாமல், இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை வெளியாகாத ஒரு வித்தியாசமான கதைகளை கொண்டு இந்த திரைப்படம் உருவாகத் துவங்கியது. இயக்குனர் Blessy தான் படித்த ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். பல உண்மை சம்பவங்களை கொண்டு கடந்த 2009ம் ஆண்டு இந்த திரைக்கதை எழுத துவங்கிய பொழுது, பிரித்திவிராஜை வைத்து தான் இந்த திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்துள்ளார்.
ஏ ஆர் ரகுமான் இசையில் பல ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பிறகு இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது. ஜோர்டான், அல்ஜீரியா, சகாரா, வாடி ரம் உள்ளிட்ட பல இடங்களிலும், பாலைவனங்களிலும் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில், பெருந்தொற்று காரணமாக தடைபட்ட பல திரைப்படங்களில் இந்த திரைப்படம் ஒன்றாக மாறியது.
பிரித்திவிராஜ் மற்றும் படக்குழுவினர் சுமார் 70 நாட்கள் ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கி இருந்து, அதன் பிறகு வந்தே பாரத் மிஷன் மூலம் அவர்கள் நாடு திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது இப்பட பணிகள் முடிந்துள்ள நிலையில் முழுக்க முழுக்க 3Dயில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் வருகின்ற 2024ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்கின்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அஜித்திடம் கதை சொன்ன "அசுர இயக்குனர்".. அவரும் ஓகே சொல்லிட்டாராம் - விரைவில் வெளிவரும் AK64 அப்டேட்!
இந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்பை இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அவர்களும், நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாரன் அவர்களும் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகை அமலா பால் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
