மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிருத்விராஜ். தமிழில் கனா கண்டேன், நினைத்தாலே இனிக்கும், சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக மட்டும் இல்லாமல் இயக்குநர் அவதாரமும் எடுத்த பிருத்விராஜ் லூசிஃபர் என்ற திரைப்படத்தை இயக்கினார். மோகன் லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டளாங்கள் நடித்த அந்த திரைப்படம் நூறு கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் சாச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்த அய்யப்பனும் கோசியும் என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்ற களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு என்ற பாடல் சோசியல் மீடியாவில் வைரலானது. மலையாள சினிமாவில் இடம் பெற்ற தமிழ் பாடல் என்பதால் இந்த பாடல் தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

பிருத்விராஜ் தனது அடுத்த படமான ஆடுஜீவிதம் படத்திற்காக ஜோர்டான் நாட்டிற்கு படக்குழுவுடன் ஷூட்டிங்கு சென்றார். மொத்தம் 58 பேர் அங்குள்ள பாலைவனத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டனர். அப்போது உலகம் முழுவதும் கொரோனா பிரச்சனை தீவிரமடைய ஆரம்பித்தது. இதனால் விமான போக்குவரத்து அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் படக்குழுவினர் பாலைவனத்தில் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாக மத்திய, மாநில அரசுகளும் படக்குழுவினரை மீட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். 

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

இதனிடையே ஜோர்டான் அரசிடம் அனுமதி வாங்கிய படக்குழுவினர் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினர். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக பாலைவனத்தில் சிக்கித் தவித்த படக்குழுவினரை மீட்டு வரும் படி அவர்களது குடும்பத்தினர் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு முயற்சி எடுத்துவருகிறது. அதன்படி ஜோர்டான் நாட்டில் சிக்கித் தவிக்கும் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை மீட்க தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 70 நாட்களாக பாலைவனத்தில் சிக்கிய படக்குழுவினர் வீடு திரும்ப உள்ள செய்தியைக் கேட்டு அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.