"அப்பா இது உங்களுக்காக".. ப்ளூ ஸ்டாரில் கலக்கிய ப்ரித்வி - தந்தை பாண்டியராஜனுக்காக போட்ட நெகிழ்ச்சி பதிவு!

Actor Prithvi Pandiarajan : கடந்த 2006ம் ஆண்டு இயக்குனர் மற்றும் பாண்டியராஜனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான கைவந்த கலை என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ப்ரித்வி ராஜன்.

Actor Prithvi Rajan shared a emotional post for father pandiarajan ans

பிரபல இயக்குனர் பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்ற நடிக்கத் துவங்கி, பின் மிகச்சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் திரை உலகில் கடந்த பல ஆண்டுகளாக பயணித்து வரும் மூத்த கலைஞர் தான் பாண்டியராஜன். இவருடைய மகன் தான் பிரிதிவி ராஜன். 

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். கடந்த 18 ஆண்டுகளாக திரைத்துறையில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்திருந்தாலும், ஒரு நல்ல வரவேற்பை பெறாமலேயே இருந்து வந்தார் பிரித்திவிராஜன் என்றால் அது மிகையல்ல. 

இப்போதான் "நோ" சொல்ல கத்துக்கிட்டேன்.. மொத்தம் எத்தனை படம் கையில் இருக்கு? - மனம் திறந்த மக்கள் செல்வன்!

இந்நிலையில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து இந்த 2024 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான "ப்ளூ ஸ்டார்" என்கின்ற திரைப்படத்தில் சாம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிருத்திவிராஜன். மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு இந்த திரைப்படம் பெற்றுக் கொடுத்தது. 

இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய அவர், தனது தந்தை குறித்து மிகவும் நெகிழ்ச்சியோடு பேசியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் தனது மகன் நடித்திருப்பதை பார்ப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு. அப்பா இது உங்களுக்காக நான் அர்ப்பணிக்கும் வெற்றி என்று கூறி நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

உண்மையில் எவ்வளவு பெரிய நடிகர் அல்லது இயக்குனரின் வாரிசாக இருந்தாலும், தங்களுக்கான சரியான வாய்ப்பு அமையும் நிச்சயம் திரைத்துறையில் போராடியே ஆகவேண்டும் என்பது இவர் விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது.  

எல்லாம் "ஜவான்" செய்த மேஜிக்.. அட்லீக்காக காத்திருக்கும் பாம்பே ஹீரோஸ் - அம்பானி வீட்டில் நடந்த அட்ராசிட்டி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios