Asianet News TamilAsianet News Tamil

’பிரசாந்தை அடுத்த அஜீத் ஆக்க முயற்சி....அதுக்காக எவ்வளவு பெரிய ரீல் சுத்துறாரு பாருங்க தியாகராஜன்?’...

தனது மகன் பிரசாந்தை எப்படியாவது முன்னுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முயற்சியில் சற்றும் மனம் தளராத நடிகர் தியாகராஜன் இம்முறை மூன்று தேசிய விருதுகள் பெற்றுள்ள படத்தின் ரீமேக் உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளார். அஜீத் ‘பிங்’ரீமேக் பெரிய வெற்றி பெற்றுள்ளதால், பிரசாந்தை அடுத்த அஜீத் ஆக்கும் முயற்சியில்  அவர் இந்த விஷப் பரிட்சையில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

actor prashanth's dad thiagarajan buys the remake rights of andhadun
Author
Chennai, First Published Aug 16, 2019, 9:31 AM IST

தனது மகன் பிரசாந்தை எப்படியாவது முன்னுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முயற்சியில் சற்றும் மனம் தளராத நடிகர் தியாகராஜன் இம்முறை மூன்று தேசிய விருதுகள் பெற்றுள்ள படத்தின் ரீமேக் உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளார். அஜீத் ‘பிங்’ரீமேக் பெரிய வெற்றி பெற்றுள்ளதால், பிரசாந்தை அடுத்த அஜீத் ஆக்கும் முயற்சியில்  அவர் இந்த விஷப் பரிட்சையில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.actor prashanth's dad thiagarajan buys the remake rights of andhadun

இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், 2019ம் ஆண்டுக்கான  சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் ‘அந்தாதுன்’ திரைப்படம் வென்று சாதனை படைத்து, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.actor prashanth's dad thiagarajan buys the remake rights of andhadun

இப்படத்தின் ரீமேக் உரிமையை தமிழுக்குக் கைப்பற்ற சில தயாரிப்பாளர்கள் முயன்றபோது பிரசாந்தின் டாடி தியாகராஜன் முந்திக்கொண்டார்.இது குறித்து தியாகராஜன் பேசுகையில், 'அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரசாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்' என்ற ‘அந்தாதுன்’படக் கதையையும் தாண்டி சிறப்பாக ஒரு கதை விடுகிறார். மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வரும் நிலையில் பிரசாந்துக்கு கணிசமான தோல்விகள் கொடுத்த தியாகராஜனே இப்படத்தை இயக்கக்கூடும்.

பிரசாந்த் ஒரு கைதேர்ந்த பியானோ கலைஞர் என்கிற தகவல் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா காதுகளுக்குச் சென்றடையாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios