Prashanth :அந்தகன் படத்துக்கு பின் அமிதாப்பச்சன் உடன் கூட்டணி அமைக்கும் பிரசாந்த்- இயக்கப்போவது யார் தெரியுமா?
Prashanth : நடிகர் பிரசாந்தும், அவரது தந்தை தியாகராஜனும், சமீபத்திய பேட்டியில் தங்களது அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர்.
பிரசாந்தின் அந்தகன்
தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். இவர் நடிப்பில் தற்போது அந்தகன் திரைப்படம் தயாராகி வருகிறது. அப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரசாந்துடன் யோகிபாபு, சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், வனிதா, சிம்ரன், கே.எஸ்.ரவிக்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.
இந்தி பட ரீமேக்
இது இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அந்தாதூன் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இந்தியில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்துக்கு இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன. இப்படத்தை ஏற்கனவே மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழில் ரீமேக் ஆகி உள்ளது.
ரிலீசுக்கு ரெடியான அந்தகன்
அந்தகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சில மாதங்களில் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக வாய்ப்புள்ளது. நடிகர் பிரசாந்தும், அவரது தந்தை தியாகராஜனும், சமீபத்திய பேட்டியில் தங்களது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
அடுத்த படம் சல்யூட்
அதன்படி பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்கு சல்யூட் என பெயரிட்டுள்ளதாகவும், இப்படத்தை தானே இயக்க உள்ளதாகவும் தியாகராஜன் தெரிவித்தார். மேலும் இப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அவர் அறிவித்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராக உள்ளதாக தியாகராஜன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்.... சூர்யா - ஜோ லிஸ்டில் இணையும் பிரபல நடிகர்-நடிகை... காதலுக்கு ஓகே சொன்ன குடும்பத்தினர்- விரைவில் டும் டும் டும்