சூர்யா - ஜோ லிஸ்டில் இணையும் பிரபல நடிகர்-நடிகை... காதலுக்கு ஓகே சொன்ன குடும்பத்தினர்- விரைவில் டும் டும் டும்
Aadhi - Nikki Galrani : சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி போன்ற நட்சத்திர தம்பதிகள் லிஸ்டில் ஆதியும் நிக்கி கல்ராணியும் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயரும் ஆதியின் கெரியர்
தமிழில் அய்யனார், மிருகம், ஈரம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஆதி. இவர் தற்போது டோலிவுட்டில் பிசியான நடிகராக உருவெடுத்துள்ளார். தற்போது லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தி வாரியர் என்கிற படத்தில் ராம் பொத்தினேனிக்கு வில்லனாக நடித்து வருகிறார் ஆதி.
நிக்கி கல்ராணி உடன் காதல்
இந்நிலையில், கடந்த ஆண்டு நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆதி வீட்டு நிகழ்ச்சியில் நிக்கி கல்ராணி கலந்துகொண்டார். அதுமட்டுமின்றி ஆதியுடன் சுற்றுலா சென்றபோது ஏர்போர்ட்டில் இவர்கள் இருவரும் ஜோடியாக சென்ற புகைபடங்கள் வெளியாகி வைரலாகின.
விரைவில் திருமணம்
இருப்பினும் இந்த காதல் விவகாரம் குறித்து இருவரும் இதுவரை எந்தவித பேட்டியில் தெரிவித்ததில்லை. அதே சமயம் இதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஆதிக்கும் நிக்கி கல்ராணிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் நிச்சயதார்த்தை எளிமையாக நடத்தி முடித்துவிட்டு, பின்னர் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
காதல் மலர்ந்தது எப்படி?
விரைவில் இவர்களது திருமண தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதியும் நிக்கி கல்ராணியும் தமிழில் யாகாவராயினும் நாகாக்க மற்றும் மரகதநாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தனர். இப்படங்களில் நடித்தபோது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது. இதன்மூலம் சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி போன்ற நட்சத்திர தம்பதிகள் லிஸ்டில் இவர்கள் இருவரும் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Sivakarthikeyan : சூப்பர்ஸ்டாருக்கு அப்புறம் என் படம் தான்... கனவை நனவாக்கிய கனா - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி