நடிகர் பிரஷாந்த் அடுத்ததாக அவருடைய தந்தை தியாகராஜன் தயாரிப்பில் உருவாகும் 'சேலஞ்ஜ்' என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருடைய ஜோடியாக நடிப்பவர் யார் என தெரிந்ததும்  நெட்டிசன்கள் பொங்கி எழுந்துள்ளனர்.  

நடிகர் பிரஷாந்த் அடுத்ததாக அவருடைய தந்தை தியாகராஜன் தயாரிப்பில் உருவாகும் 'சேலஞ்ஜ்' என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருடைய ஜோடியாக நடிப்பவர் யார் என தெரிந்ததும் நெட்டிசன்கள் பொங்கி எழுந்துள்ளனர். 

80 மாற்றும் 90 களில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருந்தவர் நடிகர் பிரசாந்த். குடும்ப பிரச்சனை காரணமாக திரையுலகில் இருந்து சில வருடங்கள் விலகியே இருந்தார். பின் இவர் நடிப்பில் வெளியான 'சாஹசம்' , 'ஜானி' போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து நடிகர் ராம் சரண் நடித்த தெலுங்கு படம் ஒன்றில் குணச்சித்திர நடிகராகவும் நடித்தார் அந்த படமும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், மீண்டும் தன்னுடைய தந்தை தியாகராஜன் தயாரிப்பில் 'சேலஞ்ஜ்' என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஏற்கனவே பிரசாந்தை வைத்து 'சாக்லேட்' என்கிற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார்.

இந்த படத்தில், நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக கடந்த வருடம் இந்திய அழகி பட்டத்தை தட்டி சென்ற திருச்சியை சேர்ந்த அனுகீர்த்திவாஸ் தான் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளாராம். இது தான் நெட்டிசன்கள் கொந்தளிப்புக்கு காரணம். 

மேலும் சிலர், அனுகீர்த்தி மற்றும் பிரஷாந்த் நடிக்க உள்ள இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளதாகவும், படப்பிடிப்புகள் உள்ளநாடு மற்றும் வெளிநாடுகளில் நடக்க உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

ஆக்ஷன் திரில்லராக உருவாக உள்ள இந்த படத்தில், பிரகாஷ் ராஜ், நாசர், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.