திருமணத்திற்கு முன்... திருமணத்திற்கு பின்..! அனுபவத்தை அள்ளி கொட்டிய நடிகர் பிரசன்னா ..! 

"அச்சமுண்டு அச்சமுண்டு" படத்தில் ஜோடியாக நடித்த சினேகாவும் பிரசன்னாவும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்து விஹான் என பெயர் சூட்டினர். குழந்தைக்கு தற்போது 4 வயது என்றால் பாருங்களேன்..இந்த 5 ஆண்டு காலத்தில், அவர்களின் திருமண வாழ்க்கையை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்  

தற்போது பிரசன்னா "திருட்டுப்பயலே 2" படத்தில் வில்லன் ரோலில் நடித்துள்ளார் அதேபோன்று மலையாளத்தில் பிரதர்ஸ் டே என்ற படம் மூலம் அறிமுகமாகி கேரளாவிலும் சற்று பிரபலமடைந்து இருக்கிறார். அருண் விஜய்யுடன் மாபியா என்ற படத்திலும் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியின்போது, "எனக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆசை.... தற்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். கல்லூரி படிப்பின் போதும் எப்போதும் சினிமா குறித்த நினைவுகளே அதிகமாக இருக்கும். என்னுடைய வாழ்க்கையை பொருத்தவரையில் திருமணத்திற்கு முன்பு... திருமணத்திற்கு பின்பு என பிரித்து பார்க்கலாம். சினேகாவை திருமணம் செய்த பிறகு என்னுடைய வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் நேர்மறையான பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என மனைவி சினேகாவை பற்றி பெருமை பேசி உள்ளார் பிரசன்னா.