தற்போது வரை பிரசன்னா முன்பு நிர்ணயிக்கப்பட்ட 13 ஆயிரத்து 528 ரூபாயை தற்போது வரை செலுத்தவில்லை. அதனால் தான் மொத்த கட்டணம் 42 ஆயிரத்து 632 ரூபாயாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தது. 

இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா பிரச்சனையில் இருந்து மக்களை காப்பதற்காக ஐந்தாம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதித்துள்ளது. இதனால் ஏராளமானோர் வீடுகளிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் பிரசன்னா கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணமாக 70 ஆயிரம் ரூபாய் வந்துள்ளதை கடுமையாக விமர்சித்தார். கொரோனா லாக்டவுன் நேரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையடிப்பதாக எத்தனை பேர் நினைக்கிறீர்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்!

பிரசன்னாவின் இந்த ட்வீட்டிற்கு ஆதரவாக பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கருத்து தெரிவித்தனர். பலரும் தங்களது வீட்டின் மற்ற கால மின் கட்டணத்தையும், லாக்டவுன் காலத்து மின் கட்டணம் உயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டி புகைப்படங்களை பகிர்ந்தனர். மின் கட்டண விவகாரம் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியை அடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

இதையும் படிங்க: நடிகர் ஆர்யா மனைவி சாயிஷா கர்ப்பம்?... கோலிவுட்டில் தீயாய் பரவும் செய்தி...!

அதில், நடிகர் பிரசன்னா ஊரடங்கு காலகட்டம் நிறைவடைந்த பின்பு மின் கணக்கெடுப்பு என்ற முறையில் கொள்ளை அடிப்பதாகத் தவறான செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பு முறையானது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படுவதால் நடிகர் பிரசன்னா தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடும் சொற்களால் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கதாகும். தற்போது வரை பிரசன்னா முன்பு நிர்ணயிக்கப்பட்ட 13 ஆயிரத்து 528 ரூபாயை தற்போது வரை செலுத்தவில்லை. அதனால் தான் மொத்த கட்டணம் 42 ஆயிரத்து 632 ரூபாயாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தது. 

Scroll to load tweet…

இதையும் படிங்க:  கொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது?... ஓவர் ஸ்லிம் லுக்கில் மார்டன் உடையில் மனதை மயக்கும் கிளிக்ஸ்...!

மின்வாரியத்தை விளக்கத்தை ஏற்ற பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “உண்மைதான்‌! ரீடிங்‌ எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள்‌ பொதுவாக கட்டணம்‌ செலுத்தும்‌ பழக்கமுள்ள நான், மார்ச்‌ மாதம்‌ ரீடிங்‌ எடுக்காததால்‌ கட்டணம்‌ செலுத்த தவறியது உண்மைதான்.அதே அளவு இதற்கு முன்‌ காலதாமதமின்றி தவறாமல்‌ கட்டணம்‌ செலுத்தி வருகிறேன்‌ என்பதும்‌ உண்மை. வாரியம்‌ சொல்வதுபோல்‌ நான்கு மாத கணக்கீட்டாலும்‌ மார்ச்‌ மாத கட்டணம்‌ சேர்த்தும்‌ எனக்கு தனிப்பட்ட கட்டணம்‌ கூடுதலாக வந்திருக்கலாம்‌. என்‌ தனிப்பட்ட பிரச்னையாக இதை நான்‌ எழுப்பவில்லை. அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர்‌ நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என்‌ ட்வீட்‌”

“மின் வாரியத்தை குறை சொல்வதோ குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும்‌ வந்திருப்பதாக சொல்லப்படும்‌ அதிக கட்டணம்‌ குறித்த கவன ஈர்ப்பும்‌ , அதன்மூலம்‌ வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில்‌ ஏதாவது முறையில்‌ இப்பிரச்னையில்‌ மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம்‌ செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின்‌ மிக்க உதவியாக இருக்கும்‌ என்பதே என்‌ வேண்டுகோள்‌"

"நேற்றைய தொலைக்காட்சி உரையாடலிலும்‌ அதையே நான்‌ குறிப்பிட்டிருக்கிறேன்‌. ஊரடங்கு காலங்களில்‌ மருத்துவ, காவல்‌, சுகாதார துறைகள்‌ போலவே மின்வாரிய ஊழியர்களும்‌, அதிகாரிகளும்‌ அயராது பணியாற்றியிருக்கிறார்கள்‌ என்பதை நன்றியோடு பாராட்டவும்‌ நான்‌ மறக்கவில்லை. மற்றபடி வாரியாதையோ அரசையோ குறைகூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாதபோதும்‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனம்நோகச்‌ செய்திருப்பின்‌ அதற்காக வருந்துகிறேன்‌“


 “மக்கள்‌ மீது விழுந்திருக்கும்‌ இந்த எதிர்பாரா சுமையை வாரியமும்‌ அரசும்‌ இறக்கிவைக்குமென எதிர்பார்க்கிறேன்‌” என்று குறிப்பிட்டுள்ள பிரசன்னா. அத்துடன் பின்குறிப்பு: என் வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும் எந்த நிலுவையும் இன்றி இன்று காலை செலுத்திவிட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.