நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பு மட்டுமல்லாமல் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருபவர். அதுவும் அண்மைக்காலமாக பாஜக மற்றும் மோடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார்.

கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியுடன் இணைந்து  கர்நாடகா மாநிலமம் முழுவதும் சுற்றி சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டார்,

இதனால் அவருக்கு கொலை மிரட்டல்கள் கூட வந்தன. இதே போல் கர்நாடக மாநிலத்தில் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு  கடும் கண்டனம் தெரிவித்ததோடு , அந்த கொலைக்கு காரணம் இந்த அமைப்புகள் தான் ஓபனாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள  நடிகர் பிரகாஷ் ராஜ் , உங்கள் ஆதரவுடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், இது குறித்த தகவல்களை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.