actor prakash raj twitter about taj mahal
தாஜ்மஹாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள், அதற்கு முன் எனது குழந்தைகளை அழைத்துச் சென்று கடைசியாக ஒரு முறை தாஜ்மகாலை காட்டி விடுகிறேன்” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பு கருத்தை பதிவிட்டு உள்ளார்.
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்/ பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மவுனமாக இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அப்போது பிரதமர் மோடி தன்னை விட பெரிய நடிகர் என்றும் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரகாஷ் ராஜ் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநில அரசு சுற்றுலா வழிகாட்டி புத்தகத்தில் இருந்து ஆக்ராவில் உள்ள உலக புகழ் பெற்ற தாஜ்மஹாலை நீக்கியது. அதைத்தொடர்ந்து அந்த மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர், தாஜ்மஹால் இந்தியா வரலாற்றில் களங்கம் என்று கடுமையாக குறை கூறினார்.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில். நீங்கள் தாஜ்மகாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள். அதற்கு முன்பு நான் எனது குழந்தைகளை அழைத்துச் சென்று கடைசியாக ஒரு முறை தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன் என்று பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு டுவிட்டரில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.
