கொரோனா:

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அடுத்து  இந்தியாவிலும் அதிகம் பரவி வருவதால், அதில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக, மத்திய  மற்றும் மாநில அரசுகள் பல்வேரு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

ஏற்கனவே 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த, மத்திய அரசு, மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கை நீடித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட சில பணிகளுக்காக கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது.உதவிகள்:

வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படும், மக்களுக்கு உதவும் வகையில்.. பிரபலங்கள் பலர் தானாக முன் வந்து தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

பிரகாஷ் ராஜ் உதவி:

அந்த வகையில், ஏற்கனவே நடிகர் பிரகாஷ் ராஜ், திரையுலக பணிகள் அனைத்தும் முடங்கியதால், வேலை இன்றி கஷ்டப்பட்டு வரும்  பெப்சி தொழிலாளர்களுக்கு, அரிசி கொடுத்து உதவிய நிலையில், மேலும் சில உதவிகளை செய்துள்ளார்.1000 குடும்பத்திற்கு உதவி:

அந்த வகையில், பிரகாஷ்ராஜ் தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம், இதுவரை சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளாராம். மேலும் தன்னுடைய பண்ணை வீட்டில் வேலை செய்து வரும் 30 தொழிலாளர்களுடன் நடிகர் பிரகாஷ் ராஜும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே நேரத்தில் தன்னிடம் பணியாற்றி வரும் அனைவருடைய குடும்பத்திற்கும் தேவையான உதவிகளை பிரகாஷ்ராஜ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.