இந்நிலையில் பிரபாஸ் தற்போது வாங்கியுள்ள ஆரஞ்சி நிற கார் குறித்த தகவலும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

பாகுபலி நாயகன் பிரபாஸ் 'ரதே ஷ்யாம்' , 'சலார்' , 'ஆதிபுருஷ்', என அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், திரையுலகினர் அனைவரையும் திரும்பி பார்க்கவைக்கும் அளவில், புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட வெளிவராத நிலையில், தற்போது மூன்று படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். 'ராதே ஷியாம்', 'ஆதிபுருஷ்', மற்றும் 'சலார்' ஆகிய படங்கள் தான் இவரது கை வசம் உள்ளது. கொரோனா பிரச்சனையின் காரணமாக படப்பிடிப்பு பணிகள் தாமதமானாலும், ஒரே நேரத்தில் தன்னுடைய படங்களை நடித்து கொடுத்துள்ளார் பிரபாஸ். இந்த படங்களின் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபாஸ் தற்போது வாங்கியுள்ள ஆரஞ்சி நிற கார் குறித்த தகவலும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அவர் ஸ்வாங்கி கார் எனப்படும், லம்போர்கினி அவென்டடோர் காரை வாங்கி ஒட்டு மொத்த திரையுலகினரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்த காரின் விலை சுமார் 6 முதல் 7 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

தன்னுடைய காரில் செம்ம கெத்தாக பிரபாஸ் ஏறும் வீடியோ காட்சி இதோ...


Scroll to load tweet…