கொரோனா பிரச்சனை காரணமாக, கிட்ட தட்ட கடந்த 5 மாதங்களாக ஷூடிங் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில்,  சமீபத்தில் தான், மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் ஒரு சில நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்ததால். மீண்டும் ஷூட்டிங் பணிகள் துவங்கியுள்ளது. இந்நிலையில்  பிரபல நடிகர் ஷூட்டிங் ஸ்பாட்டில், கீழே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஒவ்வொரு நாளும் பல எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன், விஜய் டிவி தொலைக்காட்சியின் ஸ்டாண்ட்அப் காமெடியன், வடிவேலு பாலாஜி இறந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதைத்தொடர்ந்து பிரபல மலையாள நடிகரும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுமான , பிரபீஷ். கொச்சியில் ஒரு விழிப்புணர்வு வீடியோவுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது,  திடீரென கீழே சரிந்து விழுந்து இறந்துள்ளார்.

இவரை  மருத்துவமனைக்கு அழைத்து, செல்ல முயன்றபோது யாரும் உடனடியாக உதவ முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பிரபீஷ் காரிலேயே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றும், அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஒளிப்பதிவாளர் கூறுகையில், ''அவர், தனக்கு தொண்டை வரண்டு இருப்பதாக சொல்லி, தண்ணீர் குடித்தார். தண்ணீர் குடித்து முடித்தவுடன் அவர் திடீர் என கீழே சரிந்து விழுந்துவிட்டார்'' என கூறியுள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.