தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர் என்று கூறியதுமே நினைவுக்கு வருபவர்களில் ஒருவர் நடிகர் பொன்னம்பலம். இவர் ரஜினி, கமல், அர்ஜுன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து பிரபலமானவர். 

தற்போது வயது முதிர்வு காரணமாக முரட்டு தனமான வில்லத்தனம் உள்ள படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இனி இவர் சாந்தமான கதாப்பாத்திரங்களில் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் கூறப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு மக்கள் தொடர்ந்து பல வாரங்களாக ஆதரவு கொடுத்து வந்த நிலையில், கடந்த வாரம் ஜனனி மற்றும் சென்ராயன் ஆகியோர் பெற்ற வாக்குகளில் இருந்து சற்று குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த இவர் முதல் முறையாக தன்னுடைய குடும்பம் குறித்து கமலிடம் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய இவர் "தன்னுடைய அப்பாவுக்கு நான்கு மனைவிகள் என்றும் என்னுடைய அம்மா அவருக்கு நான்காவது மனைவி என்றும் கூறினார். பின் தன்னுடைய அம்மாவிற்கு நான் ஏழாவது மகனாக பிறந்ததாகவும் தன்னை தொடர்ந்து நான்கு குழந்தைகள் பிறந்தார்கள் என்றும் கூறினார். அப்படி பார்த்தல் பொன்னம்பலம் கூட பிறந்தவர்கள் மட்டும் 11 பேர். 

இதனால் இவருடைய சொந்த ஊரில் உள்ள மொத்த கிராமும் இவருடைய சொந்தகாரர்கள் தான் என்றும் அவ்வளவு பெரிய குடும்பத்தில் தான் பிறந்து வளர்ந்தவன் என பெருமையாக கூறியுள்ளார் பொன்னம்பலம்.