இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், கடந்த ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், தொடர்ந்து அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழை தாண்டி, இந்த படத்தின் தாக்கம், வெளிநாட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த, நடிகர் பசுபதி நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், கடந்த ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், தொடர்ந்து அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழை தாண்டி, இந்த படத்தின் தாக்கம், வெளிநாட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த, நடிகர் பசுபதி நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது மட்டும் இன்றி, இந்த படத்தை பார்த்து விட்டு, சூர்யா, சிவகார்த்திகேயன், போன்ற முன்னணி நடிகர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். மேலும் படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்த கேரக்டராகவே வாழ்ந்து நடித்திருந்தது இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ். அந்த வகையில், நடிகர் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஷபீர், ஜான் கோகென், ஜான் விஜய் போன்ற நடிகர்களின் கதாபாத்திரமும், அவர்களது தத்ரூபமான நடிப்புக்கு இன்னும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்திருந்த பசுபதி, இந்த படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டு, தன்னுடைய நன்றியை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது... 'தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் & K9 ஸ்டுடியோ தயாரிப்பில், பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'சார்பட்டா பரம்பரை' சென்னையின் வாழ்வியலையும் , பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.

தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி.. செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர் பா.இரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்,நெருக்கமானவன். நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது.

என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள்.ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் , ஊடக நண்பர்களுக்கும், சமூக வலை தளங்களுக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற ரசிகர்களுக்கும் நன்றிகள் பல'. எனத் தெரிவித்துள்ளார்.
