வா வாத்தியாரே இந்த வேல்டுக்கு உள்ள போலாம்..! ட்விட்டரில் இணைந்த பசுபதியை வரவேற்ற ஆர்யா!
'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதில் இருந்து, இந்த படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதிக்கு பலர் போலி ட்விட்டர் கணக்கு துவங்கி விட்டனர். இந்நிலையில், இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகர் பசுபதியை இப்போது ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். இவரை ஆர்யாவும் கபிலனாக மாறி வரவேற்றுள்ளார்.
'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதில் இருந்து, இந்த படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதிக்கு பலர் போலி ட்விட்டர் கணக்கு துவங்கி விட்டனர். இந்நிலையில், இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகர் பசுபதியை இப்போது ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். இவரை ஆர்யாவும் கபிலனாக மாறி வரவேற்றுள்ளார்.
நடிகர் பசுபதி தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருபவர். 'இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் ஒரு சீனில் நடித்தாலும் இவரது நடிப்பு அதிகம் ரசிக்கப்பட்டது. அதே போல் நடிகை தமன்னா நடிப்பில் வெளியான 'நவம்பர் ஸ்டோரி' வெப் சீரிஸிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதை தொடர்ந்து, இயக்குனர் பா.ரஞ்சித் நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தில், ரங்கன் வாத்தியாராக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். பாக்ஸிங் வாத்தியாராகவும், திமுக கட்சி தொண்டராகவும் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இவரது பெயரில் பல போலி ட்விட்டர் பக்கங்கள் துவங்க பட்டது. இதற்க்கு அவர் தன்னுடைய மறுப்பையும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதுபோல் உலாவி வரும் போலி ட்விட்டர் பக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, உண்மையிலேயே ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார் பசுபதி. இவரை ஆர்யா கபிலனாக மாறி வரவேற்றுள்ளார். இதுகுறித்து ஆர்யா போட்டுள்ள ட்விட்டர் பதிவில் "இதுகுறித்து ஆர்யா பசுபதிக்கு கூறிய அட்வைஸில், வாத்தியாரே இதுதான் டுவிட்டர். பாக்ஸிங்கை விட ரத்த பூமி. உன்னோட பெயரில் இங்க நிறைய பேரு இருக்காங்க தெரிஞ்சும் ஒரிஜினல் நான்தான்னு உள்ள வந்த பார்த்தியா, உன் மனசே மனசு தான். வா வாத்தியரே, இந்த உலகத்துக்குள்ள போகலாம் என்று கூறி பசுபதியின் ஒரிஜினல் டுவிட்டர் ஐடி-ஐ பதிவு செய்துள்ளார்.
ஆர்யாவின் இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட பசுபதி, ரங்கன் வாத்தியாராக ஆர்யாவுக்கு அளித்துள்ள பதிலில், 'ஆமாம் கபிலா, பாக்ஸிங்கே உலகம்ன்னு இருந்துட்டேன். பரம்பரைக்கு ஒண்ணுன்னா மொத ஆள வந்துருவேன், நான் உன் சைக்கிள்ளேயே பின்னாடி உட்கார்ந்துக்கிறேன், என்னை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போ’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு தாற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.