சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்றதின் தீர்ப்பை உறுதி செய்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சற்று முன் வெளிவந்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய கருத்தை முன் வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகர், இயக்குனர் ஆன பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து ட்விட் செய்துள்ளார் அதில்... 'சட்டம் என் கையில்" என பணம் மார்தட்டிக்கொள்ளவிடாமல், சட்டம் சத்தியத்தின் பக்கமே என போராடிய நீதியின் ஆச்சாரியார்களுக்கு வணக்கமும் நன்றியும்' என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உண்மைக்கும், நீதிக்கும் குரல் கொடுத்து தீர்ப்பு கொடுத்துள்ள நீதிபதிக்கு தன்னுடைய பாணியில் மனம்நிறைந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.