நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என தமிழ் சினிமாவில் பல்வேறு பரிமாணங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் பார்த்திபன்.

இந்நிலையில் பார்த்திபன் தன்னை தாக்கி, மேலே இருந்து கீழே தள்ளியதாக, பாடலாசிரியர் ஜெயம்கொண்டான் என்பவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாருக்கு போலீசார் FIR பதிவு செய்து, cctv காட்சியை வைத்து நடிகர் பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க  உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் இந்த விஷயத்திற்கு நடிகர் பார்த்திபன், தன்னுடைய ட்விட்டர் மூலம் பதில் கொடுத்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது...  

'பார்த்திபன் கொலை செய்ய முயற்சி' Humour sense-க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது!என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர்.
மகிழ்ச்சி! என கூறியுள்ளார்.

இவர் பதில், மேலும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. யார் சொல்லுவது உண்மை, நடிகர் பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க படுமா?  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.