actor open talk about his family issue

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் இர்பான் கான். காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் இவர் வல்லவர் என்று கூட கூறலாம். இவரின் நடிப்புக்கு பாலிவுட் திரையுலகில் ரசிகர்கள் பலர் உள்ளனர்.

இந்நிலையில் இவர் கூறியுள்ள ஒரு தகவல், ஓட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமீபத்தில் ஒரு பட விழாவில் ப்ரோமோசன் நிகழ்ச்சிக்காக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது அவரிடம் நீங்கள் வில்லத்தனமான பல படங்களில் நடித்துள்ளீர்கள், நிஜத்தில் எதாவது அப்படி யோசித்தது உண்டா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு இர்பான் கான் 'இருக்கிறது நான் என் சகோதரி காதலிக்கிறார் என்று அறிந்ததும் அந்த நபரை கொலை செய்ய திட்டம் போட்டேன் எனக் கூறினார்" .

பின்னர் நன்றாக யோசித்தபோது தான் புரிந்தது, இந்த சமுதாயம் என் மனநிலையை அப்படி மாற்றி வைத்துள்ளது என்று. பின்னர் என் முடிவை மாற்றிக்கொண்டேன்" என அவர் கூறியுள்ளார். 

ஒரு முன்னணி நடிகர் இது போன்ற தகவலைக் கூறி இருப்பது பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.