இதையடுத்து குடும்பத்தினருடன் அடுத்த 14 நாட்களுக்கு நவாஸுதீன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டி படைக்கிறது. இந்தியாவில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பதற்காக 4ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகளுடன் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும், மக்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும், தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஹாலிவுட்டை பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏராளமான பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வெளிநாடு சென்ற வந்த பாலிவுட் பிரபலங்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் குடும்பத்துடன் மும்பை வீட்டில் தங்கி இருந்தார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் புதனாவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். 

அவர் செல்வதற்கு முன்பு மகாராஷ்டிரா அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு அனைவருக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா என்று சோதித்து பின்னர் நோய் தொற்று இல்லை என்பது உறுதியானதால் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கடந்த சனிக்கிழமை அவர்கள் சொந்த ஊர் சென்றடைந்துள்ளனர். இதையடுத்து குடும்பத்தினருடன் அடுத்த 14 நாட்களுக்கு நவாஸுதீன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து, அவரது சகோதரர் கூறியதாவது. இன்னும் 14 நாட்களுக்கு நவாஸுதின் குடும்பத்தாரைத் தவிர்த்து வேறு யாரையும் சந்திக்க மாட்டார்’ என்று தெரிவித்தார்.