தமிழ் சினிமாவில், காமெடி, வில்லத்தனம், குணசித்திர வேடம் என எதுவாக இருந்தாலும் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி நடிப்பவர் நடிகர் நாசர். தற்போது இவர் வலுவான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதே போல் நடிகர் சங்கத்தின் தலைவர் என்ற பதவியையும் வகித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இவருடைய மனைவி கமீலா நாசரும் நடிகர் கமலஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

இந்நிலையில் கமீலா நாசர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு சோகமான பதிவை பதிவிட்டுள்ளார். இதில் உடல் நலம் முடியாமல் இருக்கும் தன்னுடைய மகனுடன், பிரபல திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றதாகவும். அங்கு தனக்கும் தன்னுடைய மகனுக்கும் மிகவும் மோசமான அனுபவம் தான் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

அந்த திரையரங்கின் உள்ளே... தன்னுடைய மகனை வீல் சேரில் வைத்து கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டதாக மன கஷ்டத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய வாழ்வில் இது மிகவும் மோசமான சம்பவம் என்றும் இவர் குறிப்பிட்டார். அந்த திரையரங்கின் பெயரையும் கமீலா நாசர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். 

Scroll to load tweet…