Asianet News TamilAsianet News Tamil

தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு... நடிகர் சமூகம் சார்பாக வாழ்த்துக்கள்! நாசர் அறிக்கை!

இந்நிலையில், தேசிய விருதை பெற்ற பிரபலங்கள் அனைவருக்கும் தன்னுடைய மற்றும் அணைத்து நடிகர், நடிகைகள் சார்பாக வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

actor naser wishing statement for national award winners
Author
Chennai, First Published Mar 23, 2021, 2:19 PM IST

67வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 2019ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனவே அதற்கான விருதுகளும் சேர்த்து அறிவிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்: ஆட்டோவில் சடலமாக மீட்கப்பட்ட 'காதல்' பட நடிகர் விருச்சிககாந்த்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
 

இந்நிலையில், தேசிய விருதை பெற்ற பிரபலங்கள் அனைவருக்கும் தன்னுடைய மற்றும் அணைத்து நடிகர், நடிகைகள் சார்பாக வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

actor naser wishing statement for national award winners

அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது... என்னதான் மாபெரும் பொருளாதார வெற்றி  ஈட்டினாலும்,  ஒரு கலைஞனுக்கு அங்கீகாரமும், விருதுகளும், தான் மனநிறைவும்.... அகமகிழ்வும்...

மேலும் செய்திகள்: ஷகிலாவின் திருநங்கை மகள்... இந்த சீரியல் நடித்துள்ளாரா? வைரலாகும் புகைப்படம்!
 

actor naser wishing statement for national award winners

வருட காலமாய் துவண்டு கிடந்த தமிழ் திரைத்துறைக்கு சமீபத்திய விருது செய்தி புத்துணர்ச்சி புதுவேகம் மற்றும் உத்வேகத்தை கொடுத்துள்ளது. 'அசுரன்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற தனுஷ், சிறந்த படம் 'அசுரன்' படத்திற்காக தயாரிப்பாளர், எஸ்.தாணு, இயக்குனர் வெற்றிமாறன், 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருது பெற்ற விஜய் சேதுபதி, 'விஸ்வாசம்' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற டி.இமான், பார்த்திபனின் 'ஒத்த செருப்பு நம்பர் 7 ' படத்திற்காக தேசிய விருது பெற்ற ஆர்.பார்த்திபன், ஒலி வடிவமைப்பு செய்த ரசூல் பூக்குட்டி, சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக் விஷால் இப்படி தமிழ் திரைத்துறையில் வரலாற்று புத்தகத்தில் பொறித்த நடிகர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அனைவருக்கும் நடிகர் சமூகம் சார்பாக பெருமைமிகு வாழ்த்துக்கள் என்று நடிகர் நடிகர் நாசர் தேசிய விருது பெற்ற அனைவருக்கும், அனைத்து நடிகர் நடிகைகள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளதாக தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios