actor nani met the car accident

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நானி. இவர் தமிழில் 'வெப்பம்' படத்தின் மூலம் அறிமுகம்மானார். இந்த படத்தை தொடர்ந்து 'ஆஹா கல்யாணம்', 'ஈ' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு கோலிவுட் திரையுலகிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இவர் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்து தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான 'ஈ' திரைப்படம் தற்போது வரை பலரது பேவரட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் சாலை விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்த விபத்தில் நானியின் முகம் மற்றும் அவருடைய மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக அவரை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவ மனையில் சேர்த்ததாகவும் கூறப்பட்டது. 

இந்த செய்தி அவருடைய குடும்பத்தினர் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது மட்டும் இன்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தற்போது இந்த விபத்து குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் நானி ' சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மீண்டும் நடிக்க துவங்கிவிடுவேன்'என கூறியுள்ளார்.

Scroll to load tweet…