நடிகர் நானி நடிப்பில், முதல் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் ‘தசரா’ திரைப்படத்தை,  ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. 

நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலிருந்தும் முற்றிலுமாக மாறி, முதல் முறையாக முழுக்க முழுக்க மாறி, ஒரு கிராமிய கேரக்டரில் கரடுமுரடான தோற்றத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக அவர் நிறைய பயிற்சி எடுத்து தன்னை முழுமையாக கிராமத்து மனிதனாக மாற்றிக்கொண்டுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் அவரது தெலுங்கானா பேச்சுவழக்குமொழி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. படம் முழுக்க அவர் மாஸ் டயலாக்குகளைப் பேசுவதைப் பார்ப்பதே ஒரு விருந்தாக இருக்கும். ஸ்பார்க் ஆஃப் தசரா க்ளிம்ப்ஸுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்: இந்த அநீதியை இன்னொரு தாய்க்கு இழைக்காதீர்கள்..! வலி... வேதனையோடு.. சந்திரமுகி பொம்மி போட்ட பழைய பதிவு!

தயாரிப்பாளர்கள், ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டும் விதமாக தற்போது ஒரு பெரிய அறிவிப்பை தந்துள்ளனர். ஸ்ரீராம நவமி கொண்டாட்ட வெளியீடாக, 4 நாட்கள் நீண்ட வார விடுமுறையை ஒட்டி “தசரா” திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. எல்லா மொழிகளிலும் படம் வெளியாவதற்கு இது சரியான தேதியாக இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: 14 வயதில் மகள் இருக்கும் நிலையில்... மீண்டும் குட் நியூஸ் சொன்ன நடிகர் நரேன்! வைரலாகும் புகைப்படம்!

பட வெளியீடு குறித்த அறிவிப்பு போஸ்டரில் நானி அழுக்கு படிந்த கைலி, சட்டையுடன் நானி அதிரடியான கிராமத்து லுக்கில் அசத்தலாக இருக்கிறார். அவரது ஹேர் ஸ்டைலும், கையில் இருக்கும் மதுபான பாட்டில்களும் அவரது முரட்டுத்தனத்தைக் கூட்டி அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பின்னணியில், நகங்களைக் கடிக்கும் சில்க் ஸ்மிதாவின் உருவப்படத்தையும் நாம் போஸ்டரில் காணலாம். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. படத்தின் முன்னணி நடிகர்கள் அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

Scroll to load tweet…

படத்தின் கதை பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிகானியில் (தெலுங்கானா) சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இப்படத்தில் இதுவரையிலும் பார்த்திராத புதுமையான பார்த்திரத்தில் நானி நடிக்கிறார். சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும் பணியாற்றுகிறார்கள். “தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகி உள்ளது குறிபிடத்தக்கது.