பிரபல நடிகை ஸரீன் கானை பாலியல் தொழிலாளி என்று அவருடைய முன்னாள் மேனேஜர் கூறியதாக, நகுல் பட நடிகை போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

தமிழில், நடிகர் நகுல் நடித்த ’நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளவர் பிரபல இந்தி நடிகை ஸரீன் கான். இவர் இந்தியில் வீர், ரெடி, ஹவுஸ்புல் 2, ஹேட் ஸ்டோரி 3 உட்பட பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். 

இவருடைய மேனஜர் அஞ்சலி அதா. இவர் பிரபல நடிகர் ஹிர்த்திக் ரோஷன், கங்கனா ரணாவத் போன்ற பிரபலங்களுக்கு மேனேஜராக இருந்தவர். இவரை நான்கு மாதங்கள் மட்டுமே ஸரீன் கான்  மேனேஜராக வைத்துக்கொண்டதாகவும், பின் சில கருத்துவேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விலகி வேறொருவரை மேனேஜராக வைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஸரீனுக்கும் அஞ்சலிக்கும் பண விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆபாசமாகத் திட்டி குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டனர்.  அப்போது அஞ்சலி, பாலியல் தொழிலாளி என்று , ஸரீனை விமர்சித்து திட்டியுள்ளார்.  

இதனால் கோபமடைந்த ஸரீன், மும்பை கர் போலீஸ் ஸ்டேஷனில் அஞ்சலி மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில்... தன்னுடைய முன்னாள் மேனஜர் அஞ்சலி தன்னை பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் இன்னும் தனக்கு மேனேஜராக இருப்பதாகச் சொல்லி பணம் வாங்கு வதாகவும் கூறியுள்ளார். 

இதுபற்றி அவரது வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் கூறும்போது, ’மேனஜர் அஞ்சலியை  ஸரீன் கண்மூடித்தனமாக நம்பினார். அதை வைத்துக்கொண்டு அவர் பெயரை கெடுக்கும்விதமாக அஞ்சலி செயல்பட்டுள்ளார். படங்களில் நடிக்க வைப்பதாக அவர் பெயரை சொல்லி பணமும் வாங்கியுள்ளார். இதுபற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார். இது குறித்து தற்போது ஸரீன் கான் முன்னாள் மேனஜர் அஞ்சலி அதாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.