பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'பாய்ஸ்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான , நடிகர் சித்தார்த்தின் நண்பர்களில் ஒருவராக  நடித்தவர், நடிகை தேவயானியின் சகோதரரும் நடிகருமான நகுல்.

இந்த படத்தில் செம்ம குண்டாக இருந்த இவர், ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து, 'காதலில் விழுந்தேன்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.


சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. எனவே சிறந்த கம் பேக் கொடுப்பதற்கான கதையை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் நடிகர் நகுல், டாம் ஹாலண்ட் சேலஞ்ச் செய்து அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.


தலைகீழாய் நின்றபடி, கால்களை சுவற்றில் வைத்து கொண்டு... கீழே இருக்கும் டி - ஷர்ட்டை எடுத்து போட வேண்டும் என்பது தான் இந்த சேலஞ்சு. இதனை ஏற்கனவே பல பிரபலங்கள் செய்து வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் தற்போது நடிகர் நகுல் தன்னுடைய பங்கிற்கு இந்த சேலஞ்சை செய்துள்ளார்.

இதனை ஸ்பைடர் மேன்- ஹோம் கம்மிங்கில் நடித்த டாம் ஹாலண்டும் தான் வைரலாகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நகுல் வீடியோ இதோ: