மிக பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ள நடிகர் மோகன்லாலின் (Mohan lal) 'மரைக்காயர்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. 

மிக பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ள நடிகர் மோகன்லாலின் 'மரைக்காயர்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை இயக்குனர் ப்ரியதர்ஷன் தன்னுடைய கனவு படமாக இயக்கியுள்ளார். டிசம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த . 4100 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட, தயாரிப்பாளர்கள் உலகம் முழுவதும் 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 16,000 நிகழ்ச்சிகள். படம் வெளியாகும் முன்பே 100 கோடி கிளப்பில் ப்ரீ புக்கிங் மூலம் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. முன்பதிவு மூலம் மட்டும் ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்த முதல் இந்திய படம் ‘மரக்கார்’ என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: Valimai: வீட்டிலேயே 'வலிமை' படத்தை பார்த்துவிட்டு அஜித் செய்த செயல்! திக்குமுக்கு ஆடிப்போன எச்.வினோத்?

படம் வெளியாகும் முன்பே இப்படம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்டதில் மட்டுமே 100 கோடி வசூலித்துள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவு மூலம் மட்டும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த முதல் இந்திய படம் ‘மரக்கார்’ என்று இந்த படத்தின் வெற்றியை இப்போதே கொண்டாடி வருகிறது படக்குழு.

மேலும் செய்திகள்: Ajithkumar : தல என்று என்னை அழைக்க வேண்டாம்..! இப்படி அழைத்தால் போதும் அஜித் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

மோகன் லால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுஹாசினி, பிரணவ் மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய படையெடுப்பிற்கு எதிராக போராடிய, கோழிக்கட்டின் ஜாமோரின் கடற்படைத் தலைவரான குன்ஹாலி மரக்கார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது போராட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆசீர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்துளளார்.

மேலும் செய்திகள்:Tamannaah Bhatia: உடலோடு ஒட்டி இருக்கும் டைட் டீ-ஷர்ட்டில்... உச்சகட்ட கவர்ச்சியில் மூச்சு முட்ட வைத்த தமன்னா!

ரோனி ரஃபேல் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐயப்பன் நாயர் எம்.எஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே, 67வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த திரைப்படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட் மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு என மூன்று விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.