விஜயின் பீஸ்ட் பட அரபிக் குத்து பாடலுக்கு கடற்கரையில் மன்சூர் அலிகான் போட்டுள்ள ஆட்டம் தற்போது வைரலாகி வருகிறது..
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படம் குறித்த பரபரப்பு தற்போது தொற்றியுள்ளது..விஜய், பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் கமிட் ஆகியுள்ளார்..இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க அனிரூத் இசையமைக்கிறார்.
விஜயின் பீஸ்ட் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது..விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இதன் இறுதி பணிகளை தொடர்ந்து வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தை கொண்ட இந்த படத்திலிருந்து 100 நாள் படப்பிடிப்பு புகைப்படம் மற்றும் இருந்து நாள் புகைப்படம் வெளியானது. இதையடுத்து சமீபத்தில் முதல் சிங்குளுக்கான அறிவிப்பு வெளியானது.. இந்த அப்டேட்டே வேற லெவலில் இருந்தது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ள இந்த பாடல் குறித்த ப்ரோமோவில் இசையமைப்பாளர் அனிரூத், பாடலாசிரியர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் இடம்பெற்றிருந்தனர்.இவர்களுடன் போன் கால் மூலம் நடிகர் விஜயும் இணைந்திருந்தார்..அந்த ப்ரோமோவில் அரபிக் குத்து என்னும் பெயரில் முதல் சிங்கிள் ப்ரவரி 14 காதலர் தின ஸ்பெஷலாக இப்பாடல் வெளியிடப்பட்டது.
இந்தப்பாடல் வெளியானதில் இருந்து மாஸ் காட்டி வருகிறது..'ஹலமதிஅபிபு' என துவங்கும் இந்த பாடல் தான் பட்டி தொட்டியெங்கும் ஒளித்து வருகிறது..வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டா என எல்லா சமூகவலைத்தளத்தில் அரபிக் குத்து ரீல்ஸ் தான்.. சமீப காலமாக ஒரு பாடல் ஹிட் அடிக்கவேண்டுமென்றால் பலர் ரீல்ஸ் செய்திருக்க வேண்டும் என்றாகி விட்டது..அந்த வகையில் அரபிக் குத்து பாடலுக்கு சமந்தா, மாளவிகா என பல பிரபலங்களும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து வந்தனர்.அதிலும் பிக்பாஸ் யாஷிகா, ஷிவானி போன்றோரின் தாறுமாறான ஸ்டெப்ஸ் ரசிகர்களை பரவசமடைய செய்தது..
அரபிக் குத்து ரீல்ஸ்கள் இதுவரை 100 தாண்டியுள்ளதாக அனிரூத் அறிவித்திருந்தார்..இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் கடற்கரையில் அரபிக் குத்து பாடலுக்கு டான்ஸ் பாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.. ஆனால் பாடல் மட்டும் தான் அரபிக் குத்து..மூமென்ட் முழுக்க மன்சூர் ஸ்டைல் தான் கலக்கல் வீடியோ இதோ..
"
