கொரோனா வைரஸ் காரணமாக, திரையுலக பணிகள் அனைத்தும் 50 நாட்களுக்கு மேலாக முழுவதும் முடக்கப்பட்டதால், கோலிவுட் திரையுலகை நம்பி வாழ்ந்து வரும், பெப்சி தொழிலாளர்கள் 10 ,௦௦௦ பேர், உட்பட நலிந்த நாடக கலைஞர்கள், சீரியல் நடிகர்கள், சீரியல் தொழில்நுட்ப பணியாளர்கள் என பலர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் முன் வந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். இந்நிலையில் திரையுலக பணியாளர்களின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியோடு செய்யக்கூடிய, வேலைகளை துவங்க நேற்று முதல் அனுமதி கொடுத்துள்ளது தமிழக அரசு. இதன் மூலம் 25 சதவீத பேர் பயன்பெறுவார்கள்.

அதே நேரத்தில்,லட்ச கணக்கிலும், கோடிகளிலும் ஃபைனான்ஸ் வாங்கி, பெரிய முதல் சிறிய படங்களை தயாரித்து வரும், தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு பணிகள், பாதியில் நின்றதாலும், உரிய தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனதாலும், மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: கைதி செய்யப்பட்டேனா? நேற்று மட்டும் 3 ... சிறப்பாக இருந்தது என வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே!
 

இதனால், இவர்களுக்கு கை கொடுக்கும் விதமாக திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், என அனைவரும் முடிந்த வரை தங்களுடைய சம்பளத்தை குறைத்து கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கை தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்து வைக்கப்பட்டது.

இவர்களின் கோரிக்கையை ஏற்று, விஜய் ஆன்டனி, ஹரீஷ் கல்யாண், இயக்குனர் ஹரி, நடிகர் உதயா, என பலர் தானாக முன் வைத்து தங்களுடைய சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை குறைத்து கொண்டுள்ளதாக அறிவித்து வருகிறார்கள். இவர்களின் இந்த பெரிய மனதை பலர் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: நடிகர் ரோபோ ஷங்கர் வீட்டில் நடந்த திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!
 

அந்த வகையில், தற்போது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய நடிகர் மகத், தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் தயாரிப்பாளர்களுக்கு உதவும் நோக்கத்தில், தன்னுடைய சம்பளத்தில் இருந்து 50 சதவீத சம்பளத்தை குறைத்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுவரை தமிழ் சினிமாவில், கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட இதுவரை மனம் வந்து, சம்பள குறைப்பு பற்றி வாய்திறக்காத நிலையில், குறைத்த சம்பளமே பெரும் நடிகர்கள் தொடர்ந்து சம்பள குறைப்பு பற்றி தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.