பாலிவுட் திரையுலகில், ஒளிவு மறைவில்லாமல் ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுக்கும், நடிகைகளில் ஒருவரான பூனம் பாண்டே, நேற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கைது செய்யப்பட்டார் என்கிற தகவல் தீயாய் பரவியது.

அதாவது நடிகை பூனம் பாண்டே, ஊரடங்கை மீறி செயல்படும்  விதமாக மும்பையில் தனது ஆண் நண்பருடன் எந்த சரியான காரணமும் இன்றி, சுற்றி திரிந்ததாகவும்,  இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு மீறல் மற்றும் நோயை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், இதனால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

மேலும் அவரது விலையுயர்ந்து பிஎம்டபிள்யூ கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

எல்லை மீறிய கவர்ச்சியை காட்டி கொரோனா ஊரடங்கை குதூகலமாக்கி வந்த பூனம் பாண்டே கைதானதாக வந்த தகவலால் இவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து பூனம் பாண்டே தனது சமூக வலைப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

இதில், தான் மும்பையில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றும்,  தன்னை யாரும் கைது செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தான் நேற்று மட்டும் மூன்று திரைப்படங்கள் பார்த்ததாகவும் அவை மூன்றும் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பூனம் பாண்டே கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Guys I heard I got arrested, While I was having a movie marathon last night.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on May 11, 2020 at 3:38am PDT