'அங்காடி தெரு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மகேஷ். இந்த  திரைப்படம் மகேஷ் - அஞ்சலி என இருவருக்குமே திரையுலகில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

மேலும் இந்த படம் இவருக்கு அறிமுகப் படமாக இருந்தாலும், இவரின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர். 

 இந்த படத்தை தொடர்ந்து, 'மகேஷ்' நடித்த 'கொஞ்சம் பாவம் கொஞ்சம் சிரிப்பு', 'யாசகன்', 'வேல்முருகன் போர்வெல்ஸ்',  'இரவும் பகலும் வரும்', ஆகிய படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.  இவர் நடிப்பில் கடைசியாக 2015 ஆம் ஆண்டு படம் வெளியானது.  கடந்த நான்கு வருடமாக எந்த படமும் இவர் நடிப்பில் வெளியாகவில்லை.

இந்நிலையில் 'என் காதலி சீன் போடுறா' என்ற படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.  இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவரிடம் திருமணம் குறித்தும் சினிமா பயணம் குறித்தும் கேள்வி எழுப்பிய போது, காதல் திருமணம் மட்டும் இல்லைவே இல்லை  என அடித்துக் கூறியுள்ளார். பெற்றோர் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும், காதலித்து தன்னால் முடியாது என ஒரே போடாக போட்டுள்ளார்.

அதேபோல் அங்காடித்தெரு படத்தை தொடர்ந்து தன்னுடைய திரைப்பட தேர்வு தவறாக இருந்தாலும் என்' காதலி சீன் போடுற' திரைப்படம், கண்டிப்பாக ரசிகர்களை கவரும் விதத்தில் இருக்கும் என கூறியுள்ளார்.  மேலும் இந்த படத்தின் வெளியீட்டுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். 

மகேஷ் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவினாலும், அங்காடி தெரு அவருக்கு தற்போது வரை நிறைய ரசிகர்களை உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.