தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன்னுடன் படுக்கையை பகிர்ந்ததாக கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது, தமிழ் திரையுலகம் பக்கம் வந்துள்ளார். 

இதில் முதலில் சிக்கியவர் என்றால் அது இயக்குனர் முருகதாஸ் தான், இரண்டாவதாக நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி மோசமாக விமர்சித்து எழுதியிருந்தார். மூன்றாவதாக இவரின் சர்ச்சையில் சிக்கியவர் நடிகரும் நடன இயக்குனருமான லாரன்ஸ்.

தமிழக மக்கள் மனதில் நடிகர் என்பதையும் தாண்டி, சிறந்த போராளியாகவும், உதவும் பண்புகள் கொண்டவராக பார்க்கப்படும், இவரை பற்றி வெளியான தகவலால், பலர் ஸ்ரீலீக்ஸ் நடிகைகை விமர்சித்தனர்.

இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல், மாஸ் காட்டி வருகிறார் லாரன்ஸ். 

அந்த வகையில் அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ள world of dance நடனப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடன கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் பயணச் செலவிற்காக ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.5  லட்சம் காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடன போட்டியில் கலந்து கொள்ள உள்ள நடனக் கலைஞர்களுக்கு வழங்கினார். இதில் ராகவேந்திரா புரோடக்ஷன்