- Home
- Cinema
- 5 ஆண்டுகளாகப் பாடுவதை நிறுத்திய பாடகி சுஜாதா மோகன்.! இப்படி ஒரு பிரச்சனையா? சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.!
5 ஆண்டுகளாகப் பாடுவதை நிறுத்திய பாடகி சுஜாதா மோகன்.! இப்படி ஒரு பிரச்சனையா? சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.!
Singer Sujatha Mohan Health Issue : பிரபல பின்னணி பாடகி சுஜாதா மோகன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாடுவதை நிறுத்தி விட்டதாகவும், அதற்கு பின்னால் இருக்கும் பிரச்சனை குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

5 ஆண்டுகளாகப் பாடுவதை நிறுத்திய பாடகி சுஜாதா மோகன்
தமிழ் இசையுலகில் தன்னுடைய மெல்லிய குரலால் இசை ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தவர் சுஜாதா மோகன். அவருடைய பாடல்கள் சாகா வரம் பெற்றவை. மலர்களே மலர்களே, தில்லானா தில்லானா, சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால், பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், சொல்லாமலே யார் பார்த்தது, காற்றின் மொழி போன்ற பல பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு இனிமை நிறைந்த குரல் சில ஆண்டுகளாக திரைத்துறையில் ஒலிக்கவே இல்லை. அதற்கு காரணம் என்ன என்பது குறித்து அவரே மனம் திறந்து பேசி உள்ளார்.
தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனை
சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய சுஜாதா மோகன், கடந்த ஐந்து ஆண்டுகளாக தன்னால் பாட முடியவில்லை என்கிற உண்மையை பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு தொண்டையில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும், அதனால் பழைய மாதிரி பாட முடியவில்லை என்றும் கூறியிருந்தார். இது சுஜாதாவின் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு தொண்டையில் ஒரு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது ஒரு தசைச் சார்ந்த பிரச்சனை ஆகும். குரல்வளை தசைகளில் ஏற்படும் ஒருவித தசை பிடிப்பு ஆகும்.
பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் சுஜாதா
இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு பேசும் பொழுது அல்லது பாடும் பொழுது குரல் இடையில் உடைந்து போகும் அல்லது குரலில் ஒருவித நடுக்கம் ஏற்படும். இந்த பிரச்சனையால் ஒரு பாடகியாக தனது அடையாளம் பறிபோய் விடுமோ என்கிற அச்சம் அவருக்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவர் முறையான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டதாக நேர்காணலில் கூறியிருக்கிறார். இந்த குறைபாடு காரணமாக சில ஆண்டுகளாக அவர் புதிய படங்களில் பாடுவதை குறைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் இந்த பிரச்சனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்திருக்கிறார். மேலும் ‘சூப்பர் சிங்கர்’ போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
தென்னிந்தியாவின் முன்னணி பாடகி
கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட சுஜாதா மோகன் சிறு வயது முதலே பாடல்களை பாடி வருகிறார். கடந்த 50 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் 20,000-க்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கிறார். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், எஸ்.ஏ ராஜ்குமார், வித்யாசாகர், மணி ஷர்மா, கீரவாணி உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார். ‘இன்னிசை குயில்’ என்று செல்லமாக அழைக்கப்படும் சுஜாதா மோகன், தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத பாடகியாக வலம் வருகிறார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
காதல் ஓவியம் என்கிற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், ஜானி படத்தில் ஒரு இனிய மனது என்கிற மெல்லிசை பாடலை பாடி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடந்த 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஸ்வேதா மோகன் என்கிற மகள் இருக்கிறார். அவரும் பிரபல பாடகியாக வலம் வருகிறார். இந்திய திரையுலகின் பல வெற்றி பாடல்களுக்கு உயிரூட்டிய அந்த குரல் தற்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பது இசை ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மௌனம் இசை உலகிற்கு பேரிழப்பாகும். விரைவில் அவர் குணமடைந்து மீண்டும் இசைப் பயணத்தை தொடங்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

