இது நாலாவது ஆம்புலன்ஸ்.. என்றும் நிற்காது இவர் பொதுநல பணி - Real Lifeல் ஹீரோவான பாலா - குவியும் பாராட்டு!
பல ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமாகி பின் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து, இப்பொது வெள்ளித்திரையிலும் கலக்கி வரும் நடிகர் தான் பாலா. இவர் தொடர்ச்சியாக பல பொதுநல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருவது பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிவோம்.
நடிகர் kpy பாலா, தான் மீடியா துறைக்கு வருவதற்கு முன்பு இருந்தே தன்னால் இயன்ற சிறு சிறு உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றார். தற்போது தனது வாழ்க்கையில் நல்ல பல முன்னேற்றங்களை கண்டு வரும் இந்த நேரத்தில், முன்பு தான் செய்ததை விட இன்னும் அதிக அளவில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றார் அவர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரோடு மாவட்டம் கடம்பூர் பகுதியில் உள்ள குன்றி உள்ளிட்ட 18 மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் ஒரு ஆம்புலன்ஸை இலவசமாக வழங்கினார் நடிகர் பாலா அவர்கள். குன்றி உள்ளிட்ட அந்த 18 மலை கிராமத்தில் சுமார் 7500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஒன்று சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அல்லது கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் பாம்பு கடி போன்ற சில அவசர சிகிச்சைகள் பெற வேண்டிய நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லாத காரணத்தினால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பாலா வாங்கிய ஆம்புலன்ஸ் அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
இந்நிலையில் ஈரோடு பகுதியில் உள்ள பர்கூர் சோளக்கணை கிராம மக்களுக்கு சுமார் 5 லட்சம் செலவில் புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை பரிசளித்துள்ளார் பாலா. இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அவரச மருத்துவ தேவை இருந்தாலும் இவர்கள் சுமார் 20 கிலோமீட்டர் செல்லவேண்டிய நிலையில் உள்ளனர். இந்த சூழலில் பாலா வழங்கியுள்ள இந்த ஆம்புலன்ஸ் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும், இது பாலா பரிசளிக்கும் நான்காவது ஆம்புலன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.