Asianet News TamilAsianet News Tamil

நடிகர் பாக்யராஜின் ஆஸ்தான நடிகர் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் கோவை செந்தில். பல படங்களில் காமெடி வேடங்களிலும் கலக்கியுள்ளார். 

actor kovai senthil death
Author
Chennai, First Published Sep 9, 2018, 1:54 PM IST

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் கோவை செந்தில். பல படங்களில் காமெடி வேடங்களிலும் கலக்கியுள்ளார். 

பொதுவாக பல சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களில் மிகவும் எதார்த்தமான வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். மேலும் ரஜினிகாந்த நடித்த "படையப்பா', பாக்யராஜின் 'மௌனகீதங்கள்', 'இது நம்ப ஆளு' 'புதிய பாதை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

actor kovai senthil death

இவர், பிரபல இயக்குனர் பாக்யராஜின் ஆஸ்தான நடிகர் என்றும் கூறலாம். இதனை ஒரு முறை பாக்யராஜ் மேடையில் கூட கூறியுள்ளார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று காலமானார். இவரின் மரணம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios