இதைத்தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாஸ், மிகவும் உணர்ச்சிவசமான பதிவு ஒன்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. முதலில் அவருடைய பாதுகாவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கருணாஸுக்கும் தொற்று இருப்பது உறுதியானது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலில் திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் கருணாஸ் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு, பின்னர் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஏற்கனவே தனது தந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து கருணாஸின் மகனும், அசுரன் படத்தில் தனுஷுன் இரண்டாவது மகனாகவும் நடித்த கென் கருணாஸ் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாஸ், மிகவும் உணர்ச்சிவசமான பதிவு ஒன்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “கருணாஸ் ஆகிய நான் கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் இருக்கிறேன். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பெற்று நலமோடு இருக்கிறேன். உயிர்காக்கும் மருத்துவர்களோடு அன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன். மக்கள் பிரதிநிதியாகிய நான் மக்களுக்கான அரசு மருத்துவமனையில் இருக்கிறேன். உயர்ந்த மருத்துவர்கள், சிறந்த மருத்துவம், கனிவான பணிவிடை, ஆறுதல் தரும் வார்த்தை, ஆரோக்கியமான உணவு, துப்புரவு பணியாளர்களின் தூய்மையான பணி, சுத்தமான காற்று, மன அமைதி தரும் அழகான இடம் நான் இருக்கும் இருக்கும் அரசு மருத்துவமனை.

மக்களோடு மக்களாக தொகுதி மேம்பாட்டு பணிகளில் பங்கேற்ற எனக்கு கண்ணுக்குத் தெரியாத கொரோனா தொற்றிக் கொண்டது. இப்போது நான் தேறி வருகிறேன். என்னைத் தேற்றிய தமிழக முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும், ஊட்டச்சத்தான வார்த்தைகளால் என்னை உற்சாகப்படுத்திய தொகுதி மக்களுக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நான் சார்ந்த என் முக்குலத்தோர் புலிப்படைக்கும் சட்டமன்ற உறுப்பினராய் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

View post on Instagram