Asianet News TamilAsianet News Tamil

வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து ட்விட் போட்ட நடிகர் கார்த்தி!

மாரடைப்பு காரணமாக, கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் ஒட்டு மொத்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்த நிலையில் இவருடைய உடலுக்கு பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
 
actor karthi twit for vadivel balaji death
Author
Chennai, First Published Sep 11, 2020, 3:32 PM IST

மாரடைப்பு காரணமாக, கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் ஒட்டு மொத்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்த நிலையில் இவருடைய உடலுக்கு பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

விஜய் டிவி தொலைக்காட்சியில், கலக்க போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து காமெடி செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி. சமீப காலமாக இவருடைய திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக பட வாய்ப்புகளும் கிடைத்தது.

actor karthi twit for vadivel balaji death

கோலமாவு கோகிலா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த இவருக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன் திடீர் என உடல் நல பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உடனடியாக இவரை, தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். கை கால்  செயலிழந்து, அவருடைய உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவே வடிவேல் பாலாஜி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இன்றி, உயிரிழந்தார்.   வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு தொடர்ந்து பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகினார்கள். நடிகர் விவேக், தனுஷ்,உள்ளிட்ட பலர் நேரில் வரமுடியவில்லை என்றாலும், ட்விட்டரில் தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர்.

actor karthi twit for vadivel balaji death

அதே நேரத்தில் தற்போது, பிரபல நடிகர் கார்த்தி, சின்னத்திரை காமெடி புயல் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து, ட்விட் போட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, " நடிகர் வடிவேல் பாலாஜி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்". என கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios