இதனால் ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்திருந்த நிலையில், என்ன பிரச்சனையோ தெரியவில்லை அரைமணி நேரம் தாமதமாக டீசர் 5.30 மணிக்கு வெளியானது.  

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். கைதி படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள இந்த படத்தையும் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதமே இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த போதும், கொரோனா பிரச்சனை காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. மாஸ்டர், ஈஸ்வரன் படங்களால் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கி சுல்தான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: விராட் கோலி - அனுஷ்கா சர்மா குழந்தைக்கு பெயர் வச்சாச்சு... மகளின் முதல் போட்டோவுடன் வெளியான ஹேப்பி நியூஸ்!

முதலில் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்த திரைப்படம், தற்போது தியேட்டர் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் - மெர்வின், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். கையில் சாட்டையுடன் இருக்கும் கார்த்தியின் புகைப்படத்துடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில், இந்த படத்தின் டீசரை படக்குழு சற்று நேரத்திற்கு முன்பு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2ம் தேதி முதல் படத்தை தியேட்டர்களில் வெளியிட உள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிங்க: அழகு பதுமையாய் மாறிய அனிகா... குட்டி நயனின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்தீங்களா?

முதலில் இன்று மாலை 5 மணிக்கு டீசர் வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்திருந்த நிலையில், அரைமணி நேரம் தாமதமாக டீசர் 5.30 மணிக்கு வெளியானது. மகாபாரத கதை பற்றிய வசனத்துடன் தொடங்கும் டீசர், இறுதியில் “மகாபாரத கதையை போர் இல்லாமல் படிச்சு பாருங்க சார்” என கார்த்தி பேசும் வசனத்துடன் முடிவடைகிறது. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள டீசர் இதோ...