தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்த கார்த்தியின் கைதி திரைப்படம் வெற்றிகரமாக ஓடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. இதனையடுத்து அண்ணன் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் தம்பி படத்தில் அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில் நடிப்பதற்காக கார்த்தி தயாராகி வருகிறார். மேலும் ரசிகர்களின் வரவேற்பை அடுத்து கைதி 2 படத்தை தயாரிப்பதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கார்த்தியின் மக்கள் நல மன்ற நிர்வாகியான நித்யா என்பவர் நேற்று சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட நடிகர் கார்த்தி மிகவும் வேதனையடைந்தார். இதனையடுத்து நித்யாவின் வீட்டிற்கு சென்ற கார்த்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ரசிகர் நித்யாவின் உடலைப் பார்த்து கதறி, கதறி அழுதார். 

 

ரசிகரின் இறப்பை தாங்க முடியாமல் கார்த்தி தேம்பி, தேம்பி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இதேபோன்று 2017ம் ஆண்டு காரில் விபத்தில் பலியான தனது ரசிகர் ஜீவன் என்பவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற கார்த்தி, துக்கம் தாங்காமல் கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது. 

தொடரும் அதிர்ச்சி.. தெலங்கானாவில் எரிக்கப்பட்ட மற்றொரு பெண் சடலம்.. வெளியான கதிகலங்க வைக்கும் வீடியோ..!