தற்போதைய தமிழ் சினிமாவில் தங்களது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருவது நடிகர் சிவக்குமாரின் குடும்பம் தான். இரண்டு மகள்கள், மருமகள் என நடிப்பில் உச்சம் தொட்ட கலைக்குடும்பம். சூர்யா, கார்த்திக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது தம்பி படத்தில் நடித்துள்ளார். பாபநாசம் பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில், கார்த்தியின் அக்காவாக முதல் முறையாக ஜோதிகா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சவுகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

அக்கா - தம்பி இடையிலான பாச போராட்டத்துடன் குடும்ப சஸ்பென்ஸ் திரில்லர் உடன் உருவாகியுள்ள அந்த படம் கிறிஸ்துமஸ் பரிசாக வரும் 20ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள நிகிலா விமல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தம்பி படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின் போதே எனக்கும், கார்த்திக்கும் லிப்-லாக் சீன் எடுத்தார்கள். அந்த சீனில் நடிக்க கார்த்தி மிகவும் தயங்கினாராம்.

ஒருவேலை அண்ணி முன்னால் அப்படிப்பட்ட சீனில் நடிக்க கார்த்தி தயங்கியிருக்கலாம். அப்போது ஜோதிகா தான் அவருக்கு தைரியம் கொடுத்து அந்த சீனில் நடிக்க வைத்தார் என நிகிலா விமல் தெரிவித்துள்ளார். மேலும் கார்த்தி தம்பி படம் மூலம் முதன் முறையாக லிப்-லாக் சீனில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.