பிரபல தொலைக்காட்சி, நடிகரான கரண் பரஞ்பே படுக்கையறையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

'தில்மில் கயி' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் 26 வயதாகும் கரண் பரஞ்பே. 

இந்த சீரியலில் ஆண் நர்சாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் மிகவும் அழகானவர் என்பதால் இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில் மும்பையில் உள்ள அவரது வீட்டு படுக்கையறையில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது தாய் அதிர்ச்சியில் உறைந்து, உடனடியாக இவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் இவர் ஏற்க்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் தூங்கிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டிருக்கும் என்று ஒரு சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. இவருடைய மரணம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.