கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த வண்ணம் உள்ளது.  அந்த வகையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று மக்களிடம் பேசிய பாரத பிரதமர் மோடி நமது ஒற்றுமை மற்றும் உறுதியை விட வலிமையான சக்தி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.

கொரோனாவால் ஏற்பட்ட இருளை போக்கும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் ஏப்ரல் 5 தேதி ஞாயிறு இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு, மெழுகு வத்தி, அல்லது செல்போனில் உள்ள டார்ச்சை அடித்து தங்களுடைய ஒற்றுமையை பறைசாற்ற வேண்டும் என கூறினார்.

இதை அடுத்து பிரதமரின் ஒற்றுமைக்கு தோள் கொடுக்கும் விதமாக பிரபல நடிகரும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மகனுமான நடிகர் ஜீவா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று இரவு அனைவரும் விளக்கேற்றி தங்களுடைய ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது....

"எல்லோருக்கும் வணக்கம், இந்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கொடிய வைரஸை ஒற்றுமையாக துரத்தி அடிப்போம் என்கிற, நம்பிக்கையை கொடுக்கும் விதமாக மக்கள் எல்லோரும் தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று, மாண்பு மிகு பாரத பிரதமர் மோடி அவர்கள் நம்மை அழைத்திருக்கிறார்.

ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது, மருத்துவர்களுக்கு நன்றி சொல்ல, நாம் காட்டிய அதே ஒற்றுமையை ஏப்ரில் 5 ஆம் தேதி இன்று ஞாயிற்று கிழமை இரவு 9 பது மணிக்கு, 9 நிமிடம் எல்லோரும் அவரவர் வீட்டில் தீபங்கள் ஏற்றியோ, மெழுகு வத்தி ஏற்றியோ அல்லது டார்ச் லைட் அடித்தோ இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நம்முடைய ஒற்றுமையை காட்டுவோம் என்றும், சமூக விலகலை கடைபிடிப்போம் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

அந்த வீடியோ இதோ: