Asianet News TamilAsianet News Tamil

தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கா? செய்தியாளர் கேள்வியால் பொது இடத்தில் எகிறிய நடிகர் ஜீவா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவா, தேனியில் உள்ள கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது அவரிடம் தமிழ் சினிமாவில் பாலியல் தொந்தரவு இருக்கிறதா? என கேள்வி எழுப்ப... அதற்க்கு அவர் செய்தியாளரிடம் எகிறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Actor Jiiva Angry Reply to Reporter hema committee Question mma
Author
First Published Sep 1, 2024, 4:10 PM IST | Last Updated Sep 1, 2024, 4:26 PM IST

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரியின் இரண்டாவது மகனான ஜீவா, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகராக உள்ளார். தமிழ் மொழியை தாண்டி ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்து பிரபலமானவர். அப்பா தயாரிப்பாளராக இருந்ததால், ஜீவாவுக்கு நடிகராகும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்துவிட்டது.

அதன்படி 2003-ஆம் ஆண்டு 'ஆசை ஆசையாய்' படத்தில் நடித்தார். இப்படம் முதலுக்கு மோசமில்லாமல் வசூல் செய்த நிலையில், தித்திக்குதே, ராம், டிஷ்யூம் என தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், சமீப காலமாக திரையுலகில் உள்ள ஹெவி காம்படிஷன் காரணமாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க பல வருடங்களாக போராடி வருகிறார். எனினும் தற்போது இவரின் கைவசம் யாத்ரா, மேதாவி, மற்றும் கண்ணப்பா ஆகிய படங்கள் உள்ளன.

இதுவரை 28 பேர்! தயாரிப்பாளர் - இயக்குனரிடம் இருந்து தப்பித்து ஓடிவந்தேன்; நடிகை சார்மிளா பகீர்!

Actor Jiiva Angry Reply to Reporter hema committee Question mma

ரசிகர்கள் முன்பு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ள ஜீவா, தேனி மாவட்டம்... மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக ஆரம்பமாகியுள்ள ஜவுளி கடையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். நடிகர் ஜீவாவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடினர். மேலும் செய்தியாளர்கள் பலர் ஜீவா கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை கவர் செய்ய வருகை தந்தனர். கடையை சுற்றி பார்த்த பின்னர் செய்யாலர்களை சந்தித்த ஜீவா அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கதுவங்கினார் .

என் ரூமுக்குள் நுழைந்தார் தயாரிப்பாளர்.! குஷ்பு செய்த வேற லெவல் செம்ம சம்பவம்.!

இதில் செய்தியாளர் ஒருவர் மலையாள திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும், தமிழ் சினிமாவில் பாலியல் தொந்தரவு இருக்கிறதா? என்பது பற்றியும் கருத்து கேட்க, அதற்க்கு ஜீவா "அறிவு இருக்கிறதா? என்ன கோபத்துடன் பத்திரிக்கையாளரிடம் எகிறி கொண்டு பேசினார். எந்த இடத்தில் வந்து ஏன் இந்த கேள்வி கேட்கவேண்டும் என ஜீவா ஆதங்கப்பட்டு பேச,  ஒரு சிறு வாக்கு வாதத்திற்கு பின் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. பின்னர் மீண்டும் பேசியபோது. "தேனியில் எனக்கு பல இனிமையான நினைவுகள் உள்ளன. என்னுடைய தெனாவட்டு படம் இங்கு தான் படமாக்கப்பட்டது என கூறினார். பின்னர் மீண்டும் மலையாள சினிமா குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்... வரவேற்க தக்க விஷயம் என்றும், சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு  கண்டிப்பாக வேண்டும் என கூறி... பொது வெளியில் நடந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios